×
spinner

எலுமிச்சை சேமியா Lemon Semiya Recipe in Tamil

4 years ago | Home Cooking Tamil
DESCRIPTION
எலுமிச்சை சேமியா | Lemon Semiya Recipe in Tamil

English version of this recipe : https://youtu.be/jELr_ks_aPE

எலுமிச்சை சேமியா செய்ய

நீளமான சேமியா - 50 கிராம்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த சிவப்பு மிளகாய் - 2
வேர்கடலை
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு
நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
1 பழம் - லெமன் சாறு
கொத்துமல்லி தழை

தேங்காய் சட்னி செய்ய
துருவிய தேங்காய் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர்

தேங்காய் சட்னியை தாளிக்க

எண்ணெய் - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த சிவப்பு மிளகாய் - 2
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள்

#எலுமிச்சைசேமியா #LemonVermicelli #breakfastrecipe

செய்முறை

1. எலுமிச்சை சேமியா செய்ய ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிநிலையை அடைந்தவுடன் சேமியாவை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும்
2. சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்கு அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வடிக்கட்டி எடுத்து வைக்கவும்
3. அடுத்து ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, காய்ந்த சிவப்பு மிளகாய், வேர்க்கடலை, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்
4. சிறிது நேரம் கலந்தவுடன் இதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் வதக்கவும்
5. இந்த வதக்கியவற்றில் வேகவைத்த சேமியா மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும்
6. எலுமிச்சை சேமியா தயார் இதற்க்கு தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி தயாரிக்க மிக்ஸியில் துருவிய தேங்காய், உடைத்த இரண்டு பச்சை மிளகாய், வறுத்த பொட்டுக்கடலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
7. அடுத்து சட்னியை தாளிக்க ஒரு தாளிக்கும் கரண்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அரைத்த தேங்காய் சட்னியில் ஊற்றி பரிமாறவும்
8. மிகவும் எளிமையான மற்றும் விரைவில் சமைக்கக்கூடிய எலுமிச்சை சேமியா மற்றும் இதற்க்கு தொட்டு சாப்பிட தேங்காய் சட்னியும் தயார்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow