×
spinner

வெஜிடபுள் நூடுல்ஸ் Vegetable Noodles Recipe in Tamil

4 years ago | Home Cooking Tamil
DESCRIPTION
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/Fu8BPjEjDJ4

Vegetable Noodles | வெஜிடபுள் நூடுல்ஸ்

தேவையான பொருட்கள்

நூடுல்ஸ் சமைக்க

தண்ணீர்
உப்பு
நூடுல்ஸ் - 200 கிராம்
எண்ணெய்

வெஜிடபுள் நூடுல்ஸ் செய்ய

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பூண்டு
இஞ்சி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
கேரட்
பீன்ஸ்
முட்டைக்கோஸ்
சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் குடைமிளகாய்
வெங்காயத்தாள்
உப்பு
மிளகு - 1 தேக்கரண்டி
சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி
வினிகர் - 2 தேக்கரண்டி.
மிளகாய் சாஸ் - 3 தேக்கரண்டி
வேகவைத்த நூடுல்ஸ்

#வெஜிடபுள்நூடுல்ஸ் #noodlesrecipe #vegetablenoodles

செய்முறை

1. வெஜிடபுள் நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் நூடுல்ஸை வேகவைக்கவும் அதற்க்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொதிக்கவைத்து பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் நூடுல்ஸை சேர்த்து சிறிது நேரம் வேகவைக்கவும்
2. நூடுல்ஸ் வெந்த பிறகு அதை வடிகட்டி நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க சிறிதளவு எண்ணெய் விட்டு நன்கு பரப்பிவிட்டு எடுத்து வைக்கவும்
3. அடுத்து ஒரு கடாயில் நல்லெண்ணெய், மெல்லிதாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
4. வெங்காயம் வதங்கியவுடன் அதனுடன் மெல்லிதாக நறுக்கிய கேரட், பொடியாக நறுக்கிய பீன்ஸ், மெல்லிதாக நறுக்கிய முட்டைகோஸ், மெல்லிதாக நறுக்கிய பச்சை, மஞ்சள் & சிவப்பு குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
5. இந்த வதக்கியவற்றில் வெங்காயத்தாள் வெள்ளை பாகம், தேவையான அளவு உப்பு, மிளகு தூள், சோயா சாஸ், வினிகர், சில்லி சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும்
6. அடுத்து வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்
7. இறுதியாக வெங்காயத்தாள் பச்சை பாகம் சேர்த்து பரிமாறவும்
8. சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபுள் நூடுல்ஸ் தயார்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow