×
spinner

ஆவக்காய் சிக்கன் பிரியாணி Avakai Chicken Biryani Recipe in Tamil

1 month ago | Home Cooking Tamil
DESCRIPTION
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/fzT8UW1AYsI

ஆவக்காய் சிக்கன் பிரியாணி | Avakai Chicken Biryani in Pressure Cooker | Pickle Biryani | Biryani Recipe

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 500 கிராம்
நெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பிரியாணி இலை - 2
இலவங்கப்பட்டை, கிராம்பு , ஏலக்காய், சாதிக்காய் , அன்னாசி பூ & கல் பாசி
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
ஆவக்காய் ஊறுகாய் - 3 மேசைக்கரண்டி
புதினா இலைகள்
கொத்துமல்லி தழை
தண்ணீர் - 2 1/2 கப்
உப்பு - 1 தேக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி

சிக்கனை ஊறவைக்க

சிக்கன் - 1 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி

வெங்காய தயிர் பச்சடி செய்ய

வெங்காயம் - 2
உப்பு - 1 தேக்கரண்டி
தயிர் - 1 கப்
கொத்துமல்லி தழை

#ஆவக்காய்சிக்கன்பிரியாணி #AvakaiChickenBiryani #ChickenBiryani

செய்முறை

1. ஆவக்காய் சிக்கன் பிரியாணி செய்வதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்
2. அடுத்து ஒரு குக்கரில் நெய் எண்ணெய் சேர்த்து சூடேற்றிய பின்பு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல் பாசி, ஜாதிபத்திரி, பிரியாணி இலை, அன்னாசி பூ சேர்த்து நன்கு வறுக்கவும்
3. நன்கு வறுத்த பின்பு மெல்லிதாக நறுக்கிய பெரிய வெங்காயம், நீளமாக கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
4. வெங்காயம் பொன்னிறமானவுடன் இதில் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்துள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
5. பிசைந்து ஊறவைத்த சிக்கனை இந்த கலவையில் சேர்த்து நன்கு கலக்கிய பின்பு இதில் ஆவக்காய் ஊறுகாய் சேர்த்து நன்கு கலக்கவும்
6. நன்கு கலக்கி சிக்கனை வேகவைத்த பின்பு இதில் புதினா இலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு தண்ணீர், ஊறவைத்த பாசுமதி அரிசி மற்றும் நெய் சேர்த்து குக்கரை மூடி பத்து நிமிடம் வேகவைக்கவும்
7. பத்து நிமிடம் கழித்து சுவையான ஆவக்காய் சிக்கன் பிரியாணி தயார்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow